தென்காசி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ஆட்டைய போட்ட கொள்ளையர்.. 17 சவரன் அபேஸ்!

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 17 சவரன் நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே 17 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டையை பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர், கழுகுமலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

17 Sovereign jewelery robbery at police inspector house near Tenkasi

இந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் இன்ஸ்பெக்டர் செல்வி வெளியூர் சென்றிருந்தார். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் சிலர், நேற்றிரவு அவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள், 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இலத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+