தமிழக சட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்: 3வது இடத்தில் ஜெ.,- கருணாநிதி நம்பர் 4
சென்னை: தமிழக சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்தகுமார் முதல் இடத்தை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், திமுக தலைவர் கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டனர். இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மனு செய்த 997 வேட்பாளர்களில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்தது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தமிழக மக்கள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர்.

கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்
மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தமிழக சட்டசபை வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.

நம்பர் 1 அதிமுக
அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பணக்கார கட்சி என்ற முதலிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள்.

திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள்
இதற்கு அடுத்தபடியாக 73 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி என்ற 2வது இடத்தை தி.மு.க.பிடித்துள்ளது.
இதேபோல், வெற்றிப் பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரில் 5 பேர் கோடீஸ்வரர்கள்.

வசந்தகுமார் நம்பர் 1
இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.337 கோடியாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications