For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை நியமிக்கப்போகும் மூத்த நீதிபதி யார் தெரியுமா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வழங்க போகும் மூன்றாவது நீதிபதியை, மூத்த மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதி-முழு விபரம்- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வழங்க போகும் மூன்றாவது நீதிபதியை, மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது.

    18 MLA Disqualification: Huluvadi G. Ramesh will appoint The Third Judge who will decide the final verdict

    தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளது.

    இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி யார் என்று இன்னும் கூறப்படவில்லை. இதனால் அவரை நியமிக்க இன்னும் இரண்டு வார காலமாவது ஆகும். மூன்றாவது நீதிபதியை, மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருக்கும் இரண்டாவது மூத்த நீதிபதி இவர்தான்.

    மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்படும் முன் மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ்தான், இடைக்கால தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இதற்கு முன் இவர் பெங்களூர், அலஹாபாத் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

    கடந்த 2016ல் இருந்து இவர் சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். மிகவும் மூத்த நீதிபதி இவர் என்பதால், இவருக்கு மூன்றாவது நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்த போது அரசு எடுக்கும் சில முடிவுகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அதற்கு ஏற்றபடி அவர் அரசுக்கு எதிராக பலமுறை தீர்ப்பு வழங்கியும் உள்ளார். கர்நாடகாவில் இருந்த போது, பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராகவும், அப்போதைய அரசுக்கு எதிராகவும் பல முறை தீர்ப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே சில முறை பேட்டியளித்துள்ளார். இவர்தான் தற்போது மூன்றாவது நீதிபதியை நியமிக்க உள்ளார்.

    English summary
    18 MLA Disqualification Verdict: Senior Justice Huluvadi G. Ramesh will appoint The Third Judge who will decide the final verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X