எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர இருப்பதையொட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர இருப்பதையொட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக அரசியலில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அரசை ஆட்டிப்படைக்க போகும் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

    18 MLA Disqualification Verdict: TN CM hold a meeting with Cheif Secretary Girija Vaidyanathan

    தற்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆகும். தற்போது தகுதி நீக்கத்துக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 110ஆக உள்ளது. தமிழக சட்டசபையின் தற்போதைய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 216 ஆக உள்ளது.

    திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 98. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பு எதிராக வந்தால், அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டிவரும். இதனால் தமிழக அரசு கவிழும் நிலை கூட ஏற்படும்.

    இதனால் தற்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடனும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிக முக்கியமான தகவல்களை பரிமாறியுள்ளனர்.

    இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி காலையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+