திருவள்ளூரில் 18வது ஹெர்க்குலிஸ் டர்போ டிரைவ் மாநில பள்ளி, கல்லூரி மாணவியருக்கு செஸ் போட்டி!
சென்னை: திருவள்ளூரில், 18வது ஹெர்க்குலிஸ் டர்போ டிரைவ் மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவியருக்கான செஸ் போட்டித் தொடர் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட செஸ் கழகம் இந்தப் போட்டித் தொடரை நடத்தகிறது. அம்பத்தூர் டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தத் தொடரின் ஸ்பான்சராக செயல்படுகிறது.
சென்னை, மதுரவாயல், பாரதி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் (8, 9, 10, 12, 14 மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில்) 10 வீரர், வீராங்கனைகளுக்கு பத்து சைக்கிள்கள் பரிசாக அளிக்கப்படும்.
2வது இடம் பிடிப்போருக்கு கமலம் ஜான் சாமுவேல் நினைவு சுழற்கோப்பை பரிசளிக்கப்படும். இதை எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் வழங்குவார்.
இதுதவிர சிறப்பாக செயல்படும் பள்ளி, கல்லூரிக்கு டி.ஐ ரோலிங் கோப்பையும் வழங்கப்படும். இணையதளங்கள் - www. tamilchess.com, www.tiruvallurchess.com
இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட செஸ் கழகத்தின் கெளவரவச் செயலாளர் எஸ்.பலராமன் (94447 51432) தெரிவித்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications