போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கனடா செல்ல முயன்ற 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கமான பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, 3 பெண்கள் உட்பட 19 பேரும் கனடா செல்ல உள்ளதாக கூறி தங்களது பாஸ்போர்ட்டையும் அதிகாரிகளிடம் காட்டினர்.

ஆனால் அவற்றை பரிசோதித்த அதிகாரிகள் 19 பேர் வைத்திருந்ததும் போலியான பாஸ்போர்ட் என கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
விசாரணையின் துவக்கத்தில் தங்களை ஒரு நடன குழுவினர் என்று 19 பேரும் காட்டி கொண்டனர். ஆனால் அதுவும் உண்மையில்லை என்பதும், 19 பேரும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதை தவிர, போலி பாஸ்போர்ட்டுக்காக 19 பேரும் ஒரு கும்பலிடம் தலா 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இதில் 3 பெண்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications