சேலம் அருகே வீட்டில் தூங்கிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டீக்கடைக்காரர்
சேலம்: சேலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி மல்லியன்புதூரைச் சேர்ந்தவர் மாதையன். அவரது மகன் ராமர்(எ) லட்சுமணன்(27). ராமர் கடந்த 10 ஆண்டுகளாக திருமகள் பைபாஸ் அருகே தங்கி அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். அவர் டீக்கடை வைத்துள்ள பகுதியில் 9ம் வகுப்பு வரை படித்துள்ள 19 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
அவரை அடைய நினைத்த ராமர் அப்பெண்ணின் வீட்டுக்கு 2 முறை சென்றுள்ளார். ஆனால் அவரால் அப்பெண்ணை அடைய முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமர் குடித்துவிட்டு அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் திடீர் என்று கண் விழித்தபோது ராமரை பார்த்து அரிச்சி அடைந்து கூச்சலிட்டார்.
உடனே ராமர் அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ராமர் மீது புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமரை நேற்று மதியம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications