நாடு முழுவதும் பரவும் பன்றிக்காய்ச்சல்: ஒரே மாதத்தில் 191 பேர் பலி - பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!
சென்னை: இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் தாக்கி கடந்த ஜனவரி மாதம் மட்டும் 191 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 38 பேர், தெலுங்கானாவில் 34 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். டெல்லியில் 5 பேர் இந்த காய்ச்சலால் பலியாகியுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஹெச்1என்1
ஹெச்1 என்1 என்ற புதிய வகை வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. அந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
பரவும் பன்றிக்காய்ச்சல்
ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பன்றிக்காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.
நான்கு மாநிலங்களில்
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.அந்த மாநிலத்தில் 629 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 488 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது. குஜராத்தில் 309 பேர், ராஜஸ்தானில் 205 பேர் பன்றிக்காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
191 பேர் பலி
கடந்த 1 மாதத்தில் இந்தியாவில் 191 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 38 பேர், தெலுங்கானாவில் 34 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். டெல்லியில் 5 பேர் இந்த காய்ச்சலால் பலியாகி விட்டனர். மற்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவாவில் முதல் பலி
கோவா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதுவே, பன்றிக் காய்ச்சல் நோய்க்கு அம்மாநிலத்தில் நேர்ந்த முதல் பலி என மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து
ஹாங்காங்கில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவா வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பலியான நபருடன் வந்த 4 பேருக்கும் நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.
மத்திய அரசு தீவிரம்
பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் போதுமான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மத்திய சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் குழு, இந்த மாநிலங்களுக்கு விரைந்துள்ளது. இந்த மாநிலங்களில் ஹெச்1 என்1 வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்டு பிடிக்க மருத்துவ சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை அவசியம்
பன்றிக்காய்ச்சல் வழக்கமாக ஏற்படும் சளிக்காய்ச்சல் போலவே காணப்படும். கடும் காய்ச்சல், இருமல், தொண்டை சுழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு ஆகியவை உண்டாகும். உடல் பலவீனமாகவே இருக்கும். குறிப்பாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். வாந்தி அடிக்கடி வரும். தண்ணீர் குடிக்கக் கூட மனம் வராது. இத்தகைய அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலவச பரிசோதனை
சென்னையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார். "பன்றிக் காய்ச்சல் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை முதல் வகையாகும். இவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை தேவையில்லை. ஆனால் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதிகமான காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அவர்களும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சலின் அளவைப் பொருத்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
நெஞ்சுவலி அறிகுறி
இந்த 2 வகை அறிகுறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற பிரச்னைகள் இருந்தால் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இவர்களுக்கு கட்டாயம் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
கிண்டியில் பரிசோதனை
அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான டாமிபுளூ மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்று இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் 2 நாளில் வழங்கப்படும்.
கோவை, திருச்சியில்
சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications