19வது நாளாக கொந்தளிப்பில் நெடுவாசல்... அழுது ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 19வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் 19வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து 19வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் அணியணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர்.

பெண்கள் ஒப்பாரி
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் போராட்டத்தின் 19வது நாளான இன்று பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் செய்தனர். அப்போது எங்கள் மண், எங்கள் விவசாயம் எங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் உறுதியாய் தெரிவித்தனர்.

உயிர் போனாலும்…
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் உயிர் போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். "நாங்கள் ஜெயித்து காண்பிப்போம். மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் வரும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று முதிய பெண்கள் முதல் இளைய பெண்கள் வரை உறுதியேற்று போராட்டக்களத்தில் நின்று வருகின்றனர்.

முழிக்கும் பாஜக…
மக்களின் உறுதியான போராட்டத்தைக் கண்டு இதனை எப்படி அடக்குவது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு முழித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் தமிழிசையும், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தலையால் தண்ணி குடித்தாலும், நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு முன் ஒன்று எடுபடுவதாயில்லை.

நெடுவாசலைத் தொடர்ந்து…
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 19 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டம் ஒரு சங்கிலி தொடர் போல நல்லாண்டார் கொல்லை, கீரமங்கலம், வடகாடு, வாணக்கன் காடு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications