திருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி...
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 19வது மாவட்ட குழுக்களுக்கான ஓபன் தேர்வு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.
ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இப்போட்டி நடைபெறும். திருநின்றவூர் டன்லப் நகர், வேப்பம்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இப்போட்டி நடைபெறும். இந்த இடம் வேப்பம்பட்டு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது.

இதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தலா ரூ. 100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் தலா ரூ. 50 மட்டுமே.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ. 3500 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இந்தப் போட்டித் தொடரில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்போர் மட்டுமே 22வது தமிழ்நாடு மாநில பைட் ரேட்டட் அணி மற்றும் 16வது பிளிட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்க முடியும். இந்தத் தொடர் ஈரோடு மாவட்ட செஸ் சங்கத்தால் பிப்ரவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு இணைச் செயலாளர் கே.சிராஜுதீன் (9444785685), கெளரவச் செயலாளர் எஸ்.பலராமன் (9444751432), துணைத் தலைவர் இளங்குமார் (9884854008) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications