தேர்தலுக்கு முன்பே பதவி ஏற்புக்கு நாள் குறித்த கட்சிகள்... அதிமுகவு-க்கு 23, திமுக-வுக்கு 21...!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் வெற்றி தங்கள் வசமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளன. இந்த நிலையில், அதிமுக வெற்றி பெற்றால் 23ம் தேதியும், திமுக வெற்றி பெற்றால் 21ம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர தமிழகம் முழுவதும் மற்ற தொகுதிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் மழை பெய்து வருவதால் சற்று மந்தமாக காணப்பட்டாலும், மற்ற இடங்களில் வாக்குப்பதிவு சதவீதம் நன்றாகவே உள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் வியாழன், அதாவது 19ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் அதிமுக வரும் 23ம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாம். இதேபோல், அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிப்போம் என நம்பும் திமுக 21ம் தேதி பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளதாம்.

வைகாசி விசாகம்...
இதன்படி, அதிமுக வெற்றி பெற்றால் சென்னை நுாற்றாண்டு பல்கலைக் கழக மண்டபத்தில் வரும் 23ம் தேதி பதவியேற்பு விழா நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. காரணம் ஜெயலலிதாவிற்கு ராசி எண் 5.

இடைத்தேர்தல் வெற்றி...
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கடந்தாண்டு மே மாதம் 23ம் தேதி தான் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

மோடிக்கு அழைப்பு...
மேலும், இந்த பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியையும் அழைக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21ம் தேதி...
இதேபோல், திமுகவிலும் பதவியேற்பு விழா குறித்த திட்டமிடல்கள் தொடங்கப்பட்டு விட்டதாம். தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், வரும் 21ம் தேதி சனிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

சோனியா பங்கேற்பார்...
இந்த பதவியேற்பு விழாவுக்கு தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் தலைவர் சோனியாவையும், துணைத்தலைவர் ராகுலையும் அழைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications