"தனிமையில் இருக்கலாம்" காதலியை அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர்..பரபரத்த தென்காசி
தென்காசியில் காதலியை பலாத்காரம் செய்ததோடு தன் நண்பர்கள் 2 பேருக்கும் விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி: தென்காசியில் காதலித்த இளம்பெண்ணை கற்பழித்ததோடு தனது நண்பர்கள் 2 பேருக்கும் விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் உள்ள தைக்கா தெருவைச் சேர்ந்த நபர் சுடலைமுத்து. இவரது மகன் மாதவன். ஆட்டோ டிரைவர்.
மாதவன் தனது ஊருக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியும் வந்துள்ளனர்.

தென்காசி சிற்றாற்று பாலம்
அவ்வப்போது மாதவன் தனது காதலியை வெளியில் அழைத்தும் சென்று வந்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் காதலியை வெளியில் செல்லலாம் என்று மாதவன் அழைத்து இருக்கிறார். காதலன் தானே கூப்பிடுகிறார் என்று இளம்பெண்ணும் நம்பி மாதவன் கூறியபடி சென்றுள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த மாதவன், இளம்பெண்ணை தென்காசி சிற்றாற்று பாலத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

நண்பர்களின் ஆசைக்கு இணங்குமாறு
பேசிக்கொண்டு இருக்கலாம் என்று கூறி பாலத்திற்கு அடியில் இளம்பெண்ணை அழைத்துச்சென்ற மாதவன், திடீரென பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்க கொடூர எண்ணம் மாதவனுக்கு தோன்றியதாம். தனது நண்பர்களையும் பாலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். நண்பர்கள் இருவர் வந்ததும் அவர்களின் ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று இளம்பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார்.

கூட்டு பலாத்காரம்
தொடர்ந்து மாதவனின் நண்பர்கள் 2 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். காதலன் தானே அழைக்கிறான் என்ற நம்பிக்கையில் வந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரங்களை எண்ணி மனம் வெதும்பியுள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

காதலன் உள்பட 2 பேர் கைது
இளம்பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில் காதலன் மாதவன் மற்றும் மாதவனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற நபரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மாதவனின் மற்றொரு நண்பரை தேடி வருகின்றனர். தான் காதலித்த பெண்ணையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் தென்காசி சுற்று வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications