ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிந்தனர்.
தர்மபுரி: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்தனர். ஈமச்சடங்கு நடத்த வந்த நடத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பம் உறவினர்களுடன் ஈம சடங்கு செய்வதற்காக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர். காவிரி ஆற்றில் அவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது நீச்சல் தெரியாத 2 சிறுமிகள் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி காணமால் போனதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அப்பகுதியில் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுமிகளின் உடல்களை மீட்டனர். ஈமச் சடங்கு நடத்த வந்த இடத்தில் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications