வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை... இதான் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கும் லட்சணமா?
சென்னை: டிசம்பர் 30 ம் தேதிவரை வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வங்கி இயங்கும் என்றெல்லாம் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமையன்று விடுமுறையாகவும், ஒன்றாவது, மூன்றாவது சனிக்கிழமைகள் வேலை நாளாகவும் வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி, நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 26-ஆம் தேதியன்று வங்கிக் கிளைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வங்கிக் கிளைகள் அனைத்தும் திங்கள்கிழமையன்றே (நவ.28) செயல்படும்.
வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியன இரண்டு நாள்கள் செயல்படாது என்பதால் ஏ.டி.எம். மையங்கள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் உள்ள 99 சதவீத ஏடிஎம்கள் செயல்படாமல்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications