நெல்லை கடனா நதிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுமிகள்– போலீஸ்
நெல்லை: திருநெல்வேலியில், சிவசைலம் அருகே அமைந்துள்ள கடனா நதிக்கரையில் இரண்டு சிறுமிகள் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 20 வயது மற்றும் 13 வயது கொண்ட அந்த சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த 2 சிறுமிகளும் நெருங்கிய உறவினர்கள். ஒன்றாக விளையாடுவது, அரட்டை அடிப்பது என எப்போதும் இணைபிரியாமல் இருந்துள்ளனர். இது ஒரு சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் அவர் தன் மகளை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறி, குளிர்பானத்தில் பூச்சிமருந்தை கலந்து குடித்து இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications