10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அண்ணன், தம்பி கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்: 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்,அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள குள்ளவீரன்பட்டி பஞ்சாயத்து, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் பழனிமலை. இவரின் மகன்கள் மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

மணிகண்டனும் வேல்முருகனும், மேட்டூரில் உள்ள ஒரு பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, பத்தாம் வகுப்புப் படிக்கும் 15 வயது மாணவி, பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தன்னுடைய வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அதைக் கவனித்த வேல்முருகன் அம்மாணவியை பின்தொடர்ந்து சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக, மணிகண்டனும் உடன் சென்று, மாணவியை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து அவரின் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளார். அவர்களின் புகாரின் பேரில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சகோதரர்களை மேட்டூர் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
-
சேலம் மாவட்டத்தில் வேலை.. 197 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்க விட்றாதீங்க! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications