ஹவாலா பணத்துடன் 2 பேர் கைது- ரூ.90 லட்சத்துடன் எஸ்கேப்பான நபருக்கு போலீஸ் வலை வீச்சு
நெல்லை: திருநெல்வேலியில் ஹவாலா பணத்துடன் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரூ.90 லட்சம் ஹவாலா பணத்துடன் தலைமறைவான இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கையில் இருந்த பையை சோதனையிட்ட போது கட்டுகட்டாக ரூ.24 லட்சம் இருந்தது.

ஆனால் இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து இருவரும் சரியான பதில் தரவில்லை. இதனால் சந்தேகம் வலுக்கவே அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பணணையை சேர்ந்த முகமது பக்ரூதின், முகமது மைதீன் என தெரிய வந்தது. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணம் எனவும் தெரிய வந்தது.
மேலும் அவர்களுடன் நின்று கொண்டிருந்த கூட்டாளி, ரூ.90 லட்சத்துடன் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அந்த நபரை தற்போது போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications