ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து... 2 பேர் பலி..பலர் படுகாயம்.. உலுக்கிய உளுந்தூர் பேட்டை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சாலைகளில் தினசரியும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்கின்றன. இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறு வேகத்தில் செல்வதாக கடுமையான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருந்தும், சென்னை நோக்கியும் செல்லும் பேருந்துகள் சாலையில் பயங்கர வேகத்தில் செல்கின்றன என்பது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்து கிளம்பிய ஆம்னி பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையில் இருந்து நேற்றிரவு அறந்தாங்கிக்கு சென்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து அதி வேகமாக பேருந்து சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதியது.
நான்கு வழி சாலையில் பேருந்து எதிர் திசையை நோக்கி சென்றது. அப்போது எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பேருந்து அப்பளமாக நொறுங்கி லாரியினுள் சொருகி நின்றது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். பேருந்தில் இருந்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பயங்கர விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகளை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications