50 வயதில் கர்ப்பிணிகளாம்... சென்னை துணிக்கடையில் பட்டுப் புடவையை ஆட்டையப் போட்ட பெண்கள் கைது!
சென்னை: சென்னையில் கர்ப்பிணி போல நடித்து கடைகளில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் பிரபல துணிக்கடையில் நேற்று முன்தினம் 2 பெண்கள் துணி எடுப்பதற்காக வந்தனர். அவர்கள் இருவரும் பட்டுச்சேலை பிரிவில் சேலை எடுப்பது போல நடித்தனர். பின்னர் சேலை எதுவும் எடுக்காமல் கடையை விட்டு வெளியேறினார்கள்.

சேலை எடுக்க கடைக்கு வரும்போது சாதாரணமாக வந்த அந்த பெண்கள் கடையை விட்டு வெளியேறும்போது வயிறு பெரிதான நிலையில் கர்ப்பிணி பெண்கள் போல சென்றனர். இதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அந்த பெண்களை பிடித்து சோதனை போட்டனர்.
நாங்கள் கர்ப்பிணிகள், எங்களை சோதனை போட்டு அவமானப்படுத்துவதா என்று அந்த பெண்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதையும் மீறி அந்த பெண்களிடம் கடை ஊழியர்கள் சோதனை போட்டபோது, அவர்கள் அடி வயிற்றில் சேலைகளை சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பெண்கள் இருவரோடு, ஆண் ஒருவரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் துணிக்கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டரிடமும் அந்த பெண்கள் அழுது புரண்டு நாடகமாடினார்கள். நாங்கள் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேலைகள் கீழே விழுந்து கிடந்தது, அதை நாங்கள் எடுத்துக்கொடுத்தோம், அதை தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு திருட்டு பட்டம் கட்டிவிட்டனர் என்று அந்த பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண்களை விடுவிக்கும்படி சிபாரிசு வந்தது. இதனால் அவர்களை கைது செய்யாமல் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில், குறிப்பிட்ட துணிக்கடையில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது அதில் குறிப்பிட்ட அந்த பெண்கள் சேலைகளை திருடி அடி வயிற்றில் மறைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதை ஆதாரமாக வைத்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்கள் இருவரும் கர்ப்பிணி போல நாடகமாடி நகைகடையில் நகை திருடுவதையும், துணிக்கடையில் சேலைகள் திருடுவதையும் தொழிலாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெயர் செல்வி என்ற அழகுராணி. இன்னொருவர் பெயர் முத்துபாண்டியம்மாள். அவர்களுடன் பிடிபட்ட ஆணின் பெயர் பூம்பதுரை. இவர்களிடம் இருந்து 5 பட்டுப்புடவைகள் மீட்கப்பட்டன. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications