தென்காசி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி- மக்கள் மறியல்- தடியடி
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சுரண்ட என்ற இடத்தில் ஒரு மாதா கோவிலில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். இதையடுத்து மக்கள் சாலை மறியல் செய்தனர். பஸ்களையும் தாக்கினர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினார்கள். இந்த மோதல் தற்போது இரு பிரிவு மோதலாக மாறியதால் பதட்டம் நிலவுகிறது.
சுரண்டை, தண்ணூ்த்து பகுதியில் மின்னல் மாதா ஆலயம் உள்ளது. அங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் இன்று காலை ஆலய வளாகத்தில் தண்ணீர்த் தொட்டிகளை சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நீர் இறைக்கும் மோட்டாருக்கான மின்சார இணைப்பில் கசிவு ஏற்பட்டு இரண்டு பேர் பலியானார்கள். அவர்கள் 36 வயது கணேசன் மற்றும் 16 வயது பிளஸ் ஒன் மாணவன் மணிகண்டன்.
இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அங்கு கூடி விட்டனர். இறந்தவர்களின் உறவினர்களும் குழுமினர். போலீஸார் விரைந்து வந்தனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இறந்தவர்களின் உறவினர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் பஸ்கள் மீ்து தாக்குதலில் இறங்கினர். இதில் நான்கு பஸ்கள் சேதமடைந்தன. மேலும் இந்த மோதல் இரு பிரிவினருக்கு இடையிலான மோதலாகவும் மாறியது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications