என்னை முன்மொழிந்த 2 பேரை காணவில்லை.. விஷால் திடுக்!
ஆர்கே நகரில் தம்மை முன்மொழிந்த 2 பேரை காணவில்லை என நடிகர் விஷால் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகரில் தம்மை முன்மொழிந்த 2 பேரை காணவில்லை என நடிகர் விஷால் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.
நேற்று முன்தினம் அவரது மனுவை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டது. விஷாலின் பெயரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலி என கூறப்பட்டது.

மிரட்டல் ஆடியோ
இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் விஷால் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்று கூறிய விஷால் அதற்கான ஆதாரத்தையும் அளித்தார்.

விஷால் புகார்
பின்னர் நள்ளிரவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்நது விஷால் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்தார்.

மறுபரிசீலனைக்கு வாய்ப்பு
இதுகுறித்து இன்று விளக்கமளித்த தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கமளித்தால் விஷாலின் வேட்பு மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது.

2 பேரையும் காணவில்லை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வேட்புமனுவில் தன்னை முன்மொழிந்த தீபன், சுமதி ஆகியோரை காணவில்லை என அவர் புகார் அளித்துள்ளார். 2 பேரையும் கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அவர்களின் பாதுகாப்பே முக்கியம்
தான் தேர்தலில் போட்டியிடுவதை விட இருவரின் பாதுகாப்பே முக்கிய எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீபன் , சமதி ஆகிய 2 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications