அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொடூரமாகக் கொலை.. பெரும் பதட்டத்தில் திண்டுக்கல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் நேற்று பகலில் ஒரு ரவுடி கொடூரமாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டார். அதில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான பிரபல ரவுடி ஜான் பீட்டர் இன்று காலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவரை அடித்தே கொன்றுள்ளனர்.
அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் திண்டுக்கலில் பதட்டம் நிலவுகிறது.
திண்டுக்கல் முருகபவனம் சின்னமுத்து நகரை சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் பீட்டர். இவர் போலீஸ் ரவுடிகள் பட்டியலில் இருந்து வந்தவர். 25 வயதாகும் இவர் லோடுமேனாக வேலையும் பார்த்து வந்தார். திருமணமாகவில்லை.
இன்று அதிகாலை மீனாட்சிநாயக்கன் பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளி வாசற்படியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது குடிபோதையில் இருந்ததும், அவர் கையில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்ததையும் பார்த்தனர்.
உடனே இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜான்பீட்டரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். ஜான்பீட்டரின் வலது கை சிதைந்த நிலையில் துணி சுற்றப்பட்டு இருந்தது. எனவே மணிக்கட்டு நரம்பை அறுத்து யாரேனும் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஜான் பீட்டர் கொலை, பழிக்குப் பழிக் கொலையாக கருதப்படுகிறது. நேற்று பிற்பகலில் ராம்கி என்ற ராம்குமார் என்ற ரவுடியை கடை வீதியில் வைத்து ஜான் பீட்டரும், ராஜா என்பவரும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்தனர். கழுத்தை அறுத்தும் போட்டு விட்டுச் சென்றனர். இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில்தான் ஜான் பீட்டர் கொல்லப்பட்டுள்ளார்.
ராம்குமாரும், ஜான் பீட்டரும் ரவுடிகள். பல வழக்குகள் இருவர் மீதும் உள்ளன. அடிதடி, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என இவர்கள் மீது இல்லாத வழக்குகளே இல்லை.
நண்பர் செல்வக்குமார் என்பவருக்காக சில நாட்களுக்கு முன்பு ஜான்பீட்டர் மற்றும் ராஜாவை, ராம்குமார் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் சமயம் பார்த்து ராம்குமாரை போட்டுத் தள்ளி விட்டனர் ஜான் பீட்டரும், ராஜாவும். அடுத்தடுத்து இரு ரவுடிகள் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications