For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை!

மதுரையில் இரு ரவுடிகளை போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் நடந்த என்கவுண்டர்...பின்னணி என்ன?- வீடியோ

    மதுரை: மதுரையில் கொலை, திருட்டு, வழிப்பறி ஆகிய வழக்குகளில் தொடர்புடைய இரு ரவுடிகளை செல்லூர் போலீஸார் என்கவுட்டரில் சுட்டுக் கொன்றனர்.

    முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகிய இருவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் இருளாண்டி, மாயக்கண்ணன், சகுனி கார்த்தி உள்ளிட்ட 5 ரவுடிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    ரவுடிகள் துப்பாக்கிச் சூடு

    ரவுடிகள் துப்பாக்கிச் சூடு

    இதையடுத்து அவர்களை பிடிக்க இன்று செல்லூர் போலீஸார் சென்றனர். அப்போது அங்கிருந்த 5 பேரும் போலீஸாரை நோக்கி சுட்டனர்.

    திட்டமிடப்படவில்லை

    திட்டமிடப்படவில்லை

    இதனால் தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸார் திருப்பி சுட்டனர். இதில் இருளாண்டி, கார்த்தி ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது திட்டமிட்டப்படாத ஒரு என்கவுன்ட்டர் என்று போலீஸ் தெரிவித்தனர். மாயக்கண்ணன் லேசாக காயமடைந்து தப்பிவிட்டார். மேலும் இரு ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை

    மேலும் இவர்கள் 5 பேரும் மிக முக்கியமான நபரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இருவரின் உடல்களை மீட்ட போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

    வழக்குகள்

    வழக்குகள்

    சுட்டுக் கொல்லப்பட்ட இருளாண்டி சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர். இவர் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. தொழிலதிபர்களை கடத்தி பணம் பறிப்பதே இவரது தொழிலாகும். கடந்த மாதம் சென்னையில் ஒரே இடத்தில் 100 ரவுடிகளை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    2 Rowdies shot dead in Madurai by police encounter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X