நெருங்கும் 12ம் வகுப்பு தேர்வு.. அதிக தேர்ச்சிக்கு புதிய தீர்வு புத்தகம் அறிமுகம்
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற தீர்வு புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை: நெருங்கி வருகிறது 12ம் வகுப்பு தேர்வு. நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க தீர்வு புத்தகத்தை கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை விரைவாக அனுப்பும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக புதிதாக தீர்வு புத்தகம் வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிப்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சிறப்பு வழிகாட்டும் புத்தகங்களை கல்வி துறை கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் பலரும் பயன்பெறும் வகையில் வினா வங்கி புத்தகம், ஸ்கேர் புத்தகம், தீர்வு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை நடப்பு கல்வியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் தீர்வு புத்தகம் கூடுதலாக இணைப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது.
இதுபோல் நடப்பு கல்வியாண்டிலும் பன்னிரெட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாட பிரிவுகளுக்கு புதிதாக தீர்வு புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளுக்கும் சேர்ந்து ஆங்கில வழிக்கு ஒரு செட் ரூ.190, தமிழ் வழிக்கு ஒரு செட் ரூ.195 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போல் பிளஸ் 2 கணினி அறிவியில் பாடத்திற்கு 10 புத்தகங்கள் கொண்ட செட் ரூ.610 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போல் பிற பாடங்களுக்கும் அவைகளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications