வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் ஊழியரிடம் செயினை அறுத்த திருடர்கள்!
சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் ஊழியரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பணி புரிந்து வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். 1 ஆவது நடைமேடையில் நள்ளிரவு 12.45 மணி அளவில் ரயில் நிலைய அதிகாரியின் அறையை நோக்கி இவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சிந்தாமணியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். ஆயிரம் விளக்கு பகுதிக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து எந்த ரயிலில் செல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிந்தாமணி கடைசி ரயிலும் சென்று விட்டதே என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதை தொடர்ந்து அவரது பின்னால் சென்ற இளைஞர்கள் 2 பேரும் சிந்தாமணியை பிடித்து திடீரென கீழே தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுபற்றி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பிய ஓடிய கொள்ளையர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ரயில் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அதனை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications