சென்னை ஸ்பென்சர் பிளாசா நகரும் படிக்கட்டில் தவறி விழுந்த சிறுவன் விரல் துண்டிப்பு
சென்னை: ஸ்பென்சர் பிளாசா ஷாப்பிங் மாலில், எஸ்கலேட்டரில் தடுமாறி விழுந்த சிறுவன் விரல் பறிபோயுள்ளது.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ். இவர் சென்னையிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு, மனைவி சரண்யா, மற்றும் இரண்டரை வயது மகன் கிரீஷ் ஆகியோருடன் வந்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஸ்பென்சர் பிளாசாவை சுற்றி பார்க்க குடும்பத்தோடு சந்தோஷ் சென்றார். நகரும் படிக்கட்டில் சென்றபோது, கிரீஷ் தடுமாறி விழுந்தான். படிக்கட்டு முடியும் இடத்தில் அவனது கை விரல்கள் மாட்டிக் கொண்டன.
இதில் 3 விரல்கள் பலத்த சேதம் அடைந்தன. ஒரு விரல் துண்டாகியது. பதறிய சந்தோஷ், மகனை தூக்கிக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கிரீஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாளை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. அப்போது துண்டான விரலை ஒட்ட வைக்க முயற்சி நடைபெறும்.
இதனிடையே சிறுவனை கூட்டிச் சென்ற அவசரத்தில் விரலை ஸ்பென்சர் பிளாசாவிலேயே விட்டுச் சென்றுள்ளனர் சந்தோஷ் தம்பதி. அங்கிருந்த வேறு நபர்கள்தான் விரலை மருத்துவமனை கொண்டு சேர்த்ததாக கூறப்படுகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications