17 வயசு சிறுமிகள்.. 2 பேர்.. மாட்டிக் கொண்ட தானிஷ்.. மின்னல் வேக சேஸ்.. சென்னையில் பரபரப்பு!
இளைஞரிடம் செல்போனை வழிப்பறி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

சென்னை: வேற வழியில்லை.. நம்பிதான் ஆகணும்.. சென்னை வேப்பேரியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கு.
வாணியம்பாடியை சேர்ந்தவர் தானிஷ் என்ற 18 வயது இளைஞர். இவர் ஒரு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக போன மாதம் சென்னை வந்தார். வேப்பேரி பகுதியில் தங்கியிருந்து மையத்துக்கு சென்று படித்து வருகிறார்.
[ நீதிபதிகள் லீவு போடக்கூடாது.. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு!! ]

17 வயது சிறுமிகள்
இந்நிலையில் நேற்றிரவு தானிஷ்-க்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் 10 மணிக்கு மாத்திரை வாங்க கடைக்கு போனார். அப்போது திடீரென ஒரு பைக் தானிஸ் அருகில் வந்து நின்றது. அந்த பைக்கில் இரு சிறுமிகள்... இரண்டு பேருக்குமே 17 வயதிருக்கும்... மாடர்ன் டிரஸ் போட்டு பணக்கார வீட்டு பிள்ளைகள் போல இருந்தார்கள்.

செல்போன் வேணும்
குறுக்கில் வந்து பைக்கை நிறுத்தவும் தானிஷ் கொஞ்சம் ஒதுங்கி போனார். அப்போது அந்த சிறுமிகள்.. "எக்ஸ் க்யூஸ்மி" என்று கூப்பிட்டனர். தன்னை தான் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்த தானிஷ், என்ன வேண்டும் என்றார். உடனே சிறுமிகள், "இங்க ஒருத்தரை பார்க்க வந்தோம்.. செல்போன் கொண்டுவர ரெண்டு பேருமே மறந்துட்டோம். உங்க செல் கொஞ்சம் தர்றீங்களா? பேசிட்டு உடனே தந்திடறோம்" என்றனர்.

பைக்கில் பறந்தனர்
ராத்திரி 10 மணிக்கு இரு சிறு பெண்கள் இடம் தெரியாமல் சிக்கி கொண்டார்களே என்று பரிதாப்பட்ட தானிஷ் தன் ஆண்ட்ராயிடு செல்போனை அவர்களிடம் கொடுத்தார். முடிந்தது... அடுத்த கணமே பைக்கை ஸ்டார்ட் செய்தார்கள் இரு பெண்களும். இதனால் அதிர்ச்சியடைந்த தானிஷ் சத்தம்போட்டு கத்தினார். அதற்குள் அந்த பெண்கள் பைக்கில் பறந்தனர்.

விரட்டி பிடித்த பொதுமக்கள்
தானிஷ் கத்துவதையும், பெண்கள் பைக்கில் பறப்பதையும் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை துரத்திக் கொண்டே சென்றனர். அந்த பெண்களை லேசில் பிடிக்க முடியவில்லை. சந்து பொந்தெல்லாம் பைக்கை ஓட்டிக்கொண்டு பின்னால் துரத்தி வருபவர்களை திணறடித்தார்... சுற்ற வைத்தார்கள்.. கடைசியில் பொதுமக்கள் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்து பெரியமேடு போலீசில் ஒப்படைத்தார்கள்.

இரு பெண்களும் கைது
அப்போது போலீசார் விசாரணை நடத்தி அவர்களது பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். பெண்கள் இருவரும் வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அபேஸ் செய்வதும், ஆட்டைய போடுவதும் ஆண்கள்தான் என்றிருந்த காலம் போய் பெண்கள் அதுவும் சிறுமிகள் செய்த இந்த காரியம் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் சென்னை மக்களுக்கு அளித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications