நாகர்கோவிலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியமர்த்தபட்ட தமிழகம், பீஹார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் உட்பட 20 பேரை குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் செல்லஸ் என்பவர் ஆப்பிள் நெட் என்ற பெயரில் மீன் வலை உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கொடுமைபடுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று அங்கு சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது தமிழகத்தை சேர்ந்த ஏழு பேரும், பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 13 பேரும் அங்கு கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆறு பேர் குழந்தை தொழிலாளர்கள் என தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கபடாமல் கொடுமைப்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் வலை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் இங்குள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு அங்கு பணி புரியும் குழைந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications