கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!!
கூடங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கூத்தங்குழியில் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்களிடையே தாதுமணல் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இதேபோல் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது இருதரப்பும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 300 நாட்டு வெடிகுண்டுகள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிய 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான நாட்டு வெடிகுண்டுகள் கூடங்குளம் பகுதியில் பறிமுதல் செய்யப்படுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications