சிங்களப் படையின் தொடர் அட்டகாசம்... மேலும் 22 தமிழக மீனவர்கள் கைது
புதுக்கோட்டை: சிங்கள கடற்படையின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 220 மீனவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு விடுவிக்காமல் அக்கிரமம் செய்து வரும் இலங்கைப் படையினர் இன்று மேலும் 22 மீனவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று அதிகாலையில் இவர்களை பாக் ஜலசந்தி பகுதியில் சிறை பிடித்துச் சென்றுள்ளது சிங்களக் கடற்படை. தமிழக மீனவர்களையும், அவர்களது ஆறு படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாம் சிங்களக் கடற்படை.

22 மீனவர்கள் கடத்தப்பட்ட செய்தி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதாப்பட்டனத்தில் பதட்டம் நிலவுகிறது.
இத்தனைக்கும் நேற்றுதான் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் குழு, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தது. ஆனால் இன்று மீண்டும் 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கடத்தியுள்ள செயல் இந்தியாவை மிக மிக கேவலமாக இலங்கை கருதுவதையே நிரூபிப்பதாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications