சட்டசபை தேர்தல் எதிரொலி: சென்னையில் 23 போலீஸ் ஏ.சி.பிகள் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், 3 வருடங்கள் ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டது.
இதற்கிடையில் சென்னையில் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் உள்ள உதவி கமிஷனர்கள் 23 பேர் நேற்று இரவு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
தெய்வசிகாமணி, வண்ணாரப்பேட்டை-சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். மனோகரன், தாம்பரம்-உளவுப்பிரிவு உதவி கமிஷனராக்கப்பட்டார். ஜெயசுப்பிரமணியன், புளியந்தோப்பு-மாதவரம் உதவி கமிஷனராக மாற்றம்.

ராஜேந்திரன், சேலையூர்-சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம். கங்கைராஜ், ஆவடி-புளியந்தோப்பு உதவி கமிஷனராக மாற்றம். நந்தகுமார், கிண்டி-ஆவடி உதவி கமிஷனராக மாற்றம்.
கருணாநிதி, அண்ணாநகர்-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக மாற்றம். கமீல்பாட்ஷா, மேற்கு போக்குவரத்து புலனாய்வு-அண்ணாநகர் உதவி கமிஷனராக மாற்றம்.
மன்சூர் அலி, பரங்கிமலை-மேற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனராக மாற்றம். சங்கரலிங்கம், மாதவரம்-கிண்டி, உதவி கமிஷனராக மாற்றம்.
ரவிசேகர், மயிலாப்பூர்-பரங்கிமலை, உதவி கமிஷனராக மாற்றம். முருகைய்யன், மதுவிலக்கு மேற்கு-மயிலாப்பூர், உதவி கமிஷனராக மாற்றம். பீர்முகமது, திருவல்லிக்கேணி- சென்னை மத்திய மதுவிலக்கு உதவி கமிஷனராக மாற்றம்.
என்.முருகேசன், வில்லிவாக்கம்- போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராகவும், ஏ.முருகேசன், அடையாறு-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், விமலன், உளவுப்பிரிவு-புளியந்தோப்பு, உதவி கமிஷனராகவும், எஸ்.தர்மலிங்கம், நிலஅபகரிப்பு பிரிவு-போலீஸ் நலப்பிரிவு உதவி கமிஷனராகவும், கணபதி, நலப்பிரிவு-உளவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், அய்யப்பன், வேப்பேரி-பூந்தமல்லி உதவி கமிஷனராகவும், கே.கே.முருகேசன், கோட்டூர்புரம்- சேலையூர் உதவி கமிஷனராகவும், செல்வன், உளவுப்பிரிவு- அம்பத்தூர், உதவி கமிஷனராகவும், தனவேல், மதுவிலக்கு-வில்லிவாக்கம், உதவி கமிஷனராகவும், கே.கண்ணன், சி.பி.சி. ஐ.டி.-வண்ணாரப்பேட்டை, உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், 5 கூடுதல் கமிஷனர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவினர், மாற்றம் செய்யப்பட வேண்டிய இன்ஸ்பெக்டர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications