புதுச்சேரியில் ஏ.டி.எம் மெஷினை உடைத்து 24 லட்சம் ரூபாய் கொள்ளை!
புதுவை: புதுச்சேரியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூபாய் 24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
ஏ.டி.எம்மில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி காவலாளியாக உள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் துரைசாமி பணியில் இருந்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் துரைசாமி கண் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம்.க்குள் நுழைந்தனர். பின்னர் கள்ள சாவியை போட்டு ஏ.டி.எம் எந்திரத்தை திறந்துள்ளனர். அதில் இருந்த ரூபாய் 24 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அதிகாலை 4.30 மணிக்கு துரைசாமி எழுந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் திறந்து கிடந்ததைக்கண்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
காவலாளி துரைசாமியிடம் போலீசார் விசாரித்தனர். நான் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கொள்ளை நடந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் போலீசாருக்கு அவர் மீதே சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏ.டி.எம்.மை கள்ள சாவி போட்டு திறந்தாலும் ரகசிய எண்ணை பயன்படுத்தினால் தான் அதை முற்றிலும் திறக்க முடியும். எனவே வங்கிக்கு சம்மந்தப்பட்டவர்கள் ரகசிய எண்ணை தெரிந்தவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications