தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது- படகுகள் பறிமுதல்
தூத்துக்குடி: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து படகில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட கடலோர காவல்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்களான அனில் டென்சிங், பிரதீப்காந்த், அன்டெனி செபஸ்டியான் உட்பட 24 பேரை கைது செய்தனர். அவர்களின் 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை நீர்கொழும்பு, கல்பட்டி, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், இந்திய கடல் எல்லை பகுதியில் அதிக மீன்கள் கிடைப்பதால் அப்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 24 பேரையும் கடலோர காவல்படையினர் தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள ஒரு திருமணமண்டபத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications