சந்தோஷமா இருக்க முடியல.. இளம்தாய் செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சியில் வாலாஜா!
4 வயது மகனை கொன்ற தாயை வாலாஜா போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
வாலாஜா: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை பெற்ற தாய் அண்டாவுக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்!
ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த தம்பதி ராமச்சந்திரன் - காவ்யா. ராமச்சந்திரன் ஒரு கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது, 4 வயதில் தருண் என்ற குழந்தையும் இருந்தான். இப்போது காவ்யாவின் வயசு 25!
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கணவரை பிரிந்த காவ்யா குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். போன வருடம், ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து காவ்யா படித்து வந்தார். அப்போது, தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

தனிக்குடித்தனம்
2 வருஷத்தில் அது தீவிரமான காதலாக உருவாகி, போன ஜனவரி மாதம் கோயிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டனர். அதுமுதல் தியாகராஜனும் காவ்யாவும் குழந்தையை வைத்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆனால் இவர்களின் சந்தோஷத்துக்கு இடையூறாக குழந்தை இருப்பதாக உணர்ந்த இருவரும் கொலை செய்ய திட்டம் போட்டனர். இதற்காகவே வீட்டை காலி செய்து, வேறு ஒரு இடத்திற்கு குடி வந்தனர்.

குழந்தை தருண்
கடந்த 13-ந்தேதி தருண் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சில்வர் அண்டாவில் மூழ்கடித்தனர். குழந்தை திணறியபோதும், அதை பற்றி கவலைப்படாமல் இருவரும் அண்டாவுக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து அண்டாவுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது.

கண்டிப்பான கேள்வி
இறந்த குழந்தையை தூக்கி அரிசி மூட்டையில் கட்டி, பைக்கில் எடுத்து சென்று பாலாறுக்கு பக்கம் ஒரு குழியைதோண்டி புதைத்தனர். இப்படி ஒரு சம்பவம் நடந்ததே காவ்யா குடும்பம் உட்பட யாருக்குமே தெரியாது. இந்நிலையில், காவ்யாவின் தாய் வீட்டுக்கு வந்து, குழந்தை எங்கே என்று கேட்டார். ஆரம்பத்தில் மழுப்பினாலும், அம்மாவின் கண்டிப்பான கேள்வியால், உண்மையை சொல்லிவிட்டார்.

வலைவீச்சு
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் காவ்யா சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் விஷயத்தை கேள்விப்பட்டதுமே தியாகராஜன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதுடன், குழந்தையின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications