திருப்பதியில் கெட்டுப் போன லட்டு பிரசாதம்- திருப்பி அனுப்பிய அதிகாரிகள்; அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!
திருமலை : திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த லட்டு பிரசாதம் கெட்டுப் போனதால் ஊழியர்கள் அதை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள் தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதுவே விசேஷ நாட்கள் மற்றும் பிரமோற்சவ சமயங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
லட்டு பிரசாதம்:
சிலர் வைரம் வைடூரியம், தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இதனால் ஏழுமலையான் கோயிலில் தினமும் சுமார் ரூபாய் 1 கோடி உண்டியல் காணிக்கை கிடைக்கிறது. மேலும் திருப்பதி என்ற உடன் அனைத்து பக்தர்களுக்கும் நினைவில் வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதி கோயிலுக்கு சென்று வந்த பக்தர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கோயில் லட்டு பிரசாதத்தை கொடுப்பது வழக்கம்.
நவராத்திரி பிரமோற்சவம்:
திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கண்டிப்பாக லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதை பாக்கியமாக கருதுகின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
6 லட்சம் லட்டுகள் இருப்பு:
பிரமோற்சவத்திற்காக பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என கருதிய தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக 6 லட்சம் லட்டு தயார் நிலையில் இருப்பு வைத்திருந்தது. ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தபடி நவராத்திரி பிரமோற்சவத்துக்கு பக்தர்களின் எண்ணிக்கை வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் தயார் நிலையில் வைக்கப்பட்ட லட்டுகள் தேக்கமடைந்துள்ளது.
கெட்டுப்போன லட்டுகள்:
இந்நிலையில் நேற்று காலை லட்டுகள் விற்பனைக்காக கவுன்டருக்கு கொண்டு வந்த போது 5 டிரேக்களில் இருந்த 250 லட்டுகள் கெட்டுப் போயிருந்தது. இதை பார்த்த லட்டு கவுன்டர் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட லட்டு பிரசாதத்தை அவசர அவசரமாக மீண்டும் குடோனுக்கு திருப்பி அனுப்பினர்.
உலராததால் திருப்பி அனுப்பினோம்:
பிரசாத லட்டுகள் கெட்டுப்போயிருந்த தகவல் பக்தர்களிடையே பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் லட்டு பிரசாதம் வாங்க பக்தர்கள் தயக்கம் காட்டினர். இது குறித்து தேவஸ்தான துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணா கூறியதாவது, "லட்டு பிரசாதம் கெட்டுப் போகவில்லை. தயாரித்த உடனே விநியோகிப்பதற்கு கொண்டு வந்ததால் அவை உலராமல் இருந்ததால் ஊழியர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
கெடுபிடியால் குறையும் பக்தர்கள் :
திருப்பதி கோயிலில் சுவாமியை தரிசிக்க பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து 10 மணி நேரம் கூட காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களை பாதுகாப்பு காரணம் காட்டி போலீசார் கெடுபிடி செய்து வருகின்றனர். தேவஸ்தானம் சார்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு மாட வீதியில் சுவாமியை காண காத்திருந்த பக்தர்களை போலீசார் சரமாரி தாக்கிய சம்பவமும் இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications