ஒரே பள்ளியில் 27 “ஸ்டேட் ரேங்க்ஸ்” – சாதித்துக் காட்டிய வேலம்மாள்!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 27 மாணவர்கள் மாநில அளவில் இடங்களைப் பிடித்துள்ளனர். அதில் 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
இன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளில் சென்னை, திருவள்ளூர் கல்வி மாவட்டங்கள் தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கி விட்டன.
எனினும், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, தமிழ்நாட்டில் எந்த பள்ளியும் படைக்காத சாதனையை செய்துள்ளது.

மாநில அளவில் முதலிடம்:
இந்த பள்ளியில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் ஆர்.அனு கீர்த்தனா, ஷிவானி இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

சென்டம் சாதனை:
இவர்கள் இருவரும் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மற்ற மொழிகளில் முதலிடம்:
இதே பள்ளியில் பிரெஞ்சு, சமஸ்கிருதம் மொழியை முதல் பாடமாக எடுத்து படித்த மேலும் 5 பேர் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

8 பேர் இரண்டாம் இடத்தில்:
வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகளில் 8 பேர் தலா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் 12 பேர்:
இதே பள்ளியில் படித்த 12 பேர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ஆவது இடத்தைப் பிடித்தனர். சாதனை படைத்த இந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், துணை முதல்வர் பொன்மதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications