விடுதலை... விடுதலை... பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
Recommended Video

சென்னை: 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியான உடனே டெல்லியில் கூடியிருந்த திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வீட்டில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.

சென்னை சிஐடி காலனி
அதேபோல் கனிமொழி வீட்டு முன்பாகவும் திமுகவினர் பட்டாசு வெடித்தனர். அங்கு திரண்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை பரிமாறினர்.
|
திண்டுக்கல், திருச்சியில்..
திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல இடங்களிலும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் இந்த தீர்ப்பை வரவேற்றனர். பெரம்பலூரில் ஆ. ராசாவின் வீடு முன்பாக உற்சாகத்துடன் தொண்டர்கள் திரண்டு முழக்கமிட்டனர்.
இனிப்புகள் வழங்கி...
அறந்தாங்கியில் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடித்தனர் திமுகவினர். பேருந்துகளில் பயணித்தோருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
|
களைகட்டிய கொண்டாட்டம்
திருவண்ணாமலை மற்றும் சேலத்திலும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும் லட்டுகளை விநியோகித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications