ஊழல் கறையை துடைச்சுட்டோம்... மக்களிடம் சொல்வது உங்க கடமை - ஸ்டாலின்
திமுகவின் மீதான ஊழல் கறை துடைக்கப்பட்டு விட்டது. திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: 2 ஜி வழக்கின் விசாரணையின் போது ஊடகங்கள் எவ்வாறு இந்த வழக்கு குறித்து செய்திகளை ஆர்வத்துடன் வெளியிட்டதோ அதே ஆர்வத்துடன் இந்த தீர்ப்பு குறித்தும், திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும்
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்தது. 2011ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
இந்த வழக்கு திமுகவை அழிக்க வேண்டும் என திட்டமிட்டு தொடரப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதி அரசர் வழங்கியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து, திமுக எந்த தவறும் செய்யவில்லை என நிரூபணமாகியுள்ள

திமுகவிற்கு அவமானம்
அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டு போட்ட வழக்கு. ஆகவே அந்த வகையில் பெரிய வகையில் சித்தரித்து பொய் கணக்குகளை காட்டி இந்த வழக்குகளை திணித்தார்கள். அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு டெல்லி சிறப்பு நீதிமன்றம் மூலம் கிடைத்திருப்பது உள்ளபடி மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

செய்தி வெளியிட்ட ஊடகங்கள்
இந்த வழக்கின் விசாரணையின் போது ஊடகங்கள் எவ்வாறு இந்த வழக்கு குறித்து செய்திகளை ஆர்வத்துடன் வெளியிட்டனர். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய நம்பரை வெளியிட்டு நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

செய்தி வெளியிட வேண்டும்
இப்போது தீர்ப்பு வெளியாகி விட்டது. எங்கள் மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டது. ஊடகங்கள் இப்போதும் அதே ஆர்வத்துடன் இந்த தீர்ப்பு குறித்தும், திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications