சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! இருவர் படுகாயம்
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மூலப்பொருட்கள் வைத்திருந்த அறை திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த அறையே தரைமட்டமானது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த விபத்தில் 2பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி படு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் நடந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான ஆலைகள் மூடப்பட்டன.
அதிகாரிகளின் கெடுபிடி ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவருகிறது. எனவே விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications