தொடரும் ஆர்.கே.நகர் அதிரடி.. 3 "ஏசி"க்கள் இடமாற்றம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைப்பு!
ஆர்.கே.நகரில் 3 போலீஸ் உதவி ஆணையர்கள் இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் காவல்துறை உதவி ஆணையர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மஜா தேவி, காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மாற்றப்பட்டனர்.

பத்மஜா தேவிக்குப் பதிலாக பிரவீண் நாயரும், ஜார்ஜுக்கு பதிலாக கரண் சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து 115 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே. நகருக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்த்குமார், ராயபுரம் ஸ்டீபன், திருவொற்றியூர் குமார் ஆகிய மூவரை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அவர்களை மூவரையும் இடமாற்றம் செய்து மூவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு பதில் புதிய ஆணையர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications