2011 தேர்தலை விட 2016 சட்டசபைத் தேர்தலில் 3 கோடி வாக்காளர்கள் அதிகம்!
சென்னை: 2011ல் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் 14.61 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அது 3 கோடியாக அதிகரித்து கிட்டத்தட்ட 17 கோடி வாக்காளர்களாக உயர்ந்துள்ளனர்.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 14 கோடியே 61 லட்சத்து 72 ஆயிரத்து 850 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
நடப்பு சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 கோடியே 98 லட்சத்து 63 ஆயிரத்து 426 பேர் ஆவர்.

2011 தேர்தலில் மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம்:
தமிழ்நாடு 4,80,83,088
அஸ்ஸாம் - 1,81,74,973
மேற்கு வங்கம் - 5,61,68,836
கேரளா - 2,29,40,408
புதுச்சேரி - 8,05,545

2016 தேர்தலில் மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம்:
அஸ்ஸாம் - 1,98,66,496
கேரளா - 2,56,08,720
தமிழ்நாடு - 5,79,15,075
மேற்கு வங்கம் - 6,55,46,101
புதுச்சேரி - 9,27,034

தமிழக வாக்காளர் எண்ணிக்கை
தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட ஒரு கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போதைய தேர்தலில் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 75 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

புதுச்சேரியில்
புதுச்சேரியில் இந்த முறை 9 லட்சத்து 27 ஆயிரத்து 34 பேர் வாக்களிக்கவுள்ளனர். கடந்த முறையை விட இது ஒரு லட்சம் அதிகமாகும்.

தமிழகத்தில் 65,613 வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 613 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. புதுச்சேரியில் 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். கேரளாவில் 21 ஆயிரத்து 498 வாக்குச் சாவடிகள் அமையவுள்ளன.












Click it and Unblock the Notifications