ஒரே நேரத்தில் 3 மாணவிகள் “எஸ்கேப்” - உச்சகட்ட பரபரப்பில் திருச்சி அன்னை ஆசிரமம்
திருச்சி: திருச்சி அன்னை ஆசிரமத்தில் ஓரே நேரத்தில் 3 மாணவிகள் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ளது அன்னை ஆசிரமம். தமிழ்நாடு சமூக நலத்துறை மானிய உதவியுடன் இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் வளர்ந்து திருமணம் செய்து கொடுக்கும் வரையில் இந்த ஆசிரமம் தத்தெடுத்துக் கொள்ளும். இவ்வாறு 150 மாணவிகள், கைவிடப்பட்ட 55 முதியோர்கள் இங்கு அடைக்கலமாக இருந்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு சிறப்பு பிரார்த்தனை ஒன்று நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து இரவு தூங்க சென்ற மாணவிகளை, வழக்கம்போல ஆசிரம நிர்வாகிகள் கணக்கெடுத்துள்ளனர். அப்போது ஆதரவற்ற நிலையில் இங்கு சேர்க்கப்பட்ட திருச்சி கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பாண்டி மீனா, திருவாரூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் மாணவி இலக்கியா, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் திருமணத்தின் போது மீட்கப்பட்ட திருச்சி துறையூர் சேர்ந்த டெய்லரிங் மாணவி உமா ஆகிய 3 மாணவிகள் மாயமானது தெரியவந்தது. மாணவிகள் மாயமானதை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் இது குறித்து மாணவிகளின் உறவினர்களுக்கு தகவல் அளித்து, பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இதில் எந்தவித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து இன்று திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரினை தொடர்ந்து போலீசார் மாணவிகள் கடத்தப்பட்டார்களா? அல்லது காதல் காரணமாக ஓடிவிட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக விசாரணையில் 3 மாணவிகளும் ஆசிரமத்தின் பின் பக்க சுவற்றில் ஏறி ஓடியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications