அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை.. கரூரை அதிர வைக்கும் கொள்ளையர்கள்!
கரூர்: கரூரில் அடுத்தடுத்து 3 வீடுகளை கொள்ளையடித்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சார்ந்தவர் சுப்பிரமணி (35). இவர் இங்குள்ள ஜவுளி நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக உள்ளார்.

சுப்பிரமணி தனது தம்பி சேகரின் திருமணத்திற்காக ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில், சுப்பிரமணியனின் வீடு திறந்து கிடந்ததுடன், உள்ளே இருந்த லைட், பேன் ஆகியவை ஓடியபடி இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த வீட்டார்கள் வெங்கமேடு போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்திய போது சுமார் 35 பவுன் நகைகள் பீரோவை உடைத்து திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் ரொக்கம் ரூ 20 ஆயிரமும் திருடு போய் உள்ளது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதே போல சுப்பிரமணியனின் அருகே உள்ள மேலும் இரு வீடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications