குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரையைச் சேர்ந்த ஒருவர் கைது
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சிவமணி என்வரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை மனதில் கொண்டு இங்கு வரும் உற்சாக பிரியர்களுக்கு அரசு மதுக்கடைகள் உள்ளன. இது மட்டுமின்றி போதை பிரியர்களுக்காக சிலர் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில் நேற்று செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் உதவி ஆய்வாளர் துரை மற்றும் போலீசார் பிரானூர் பார்டர் பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பேருந்து ஒன்றில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த சிவமணி என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 3கிலோ கஞ்சா வைத்திருப்பதும் இதனை குற்றாலம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் விற்பனை செய்ய வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications