திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 75 லட்சம் மதிப்பு 3 கிலோ தங்க கட்டிகள்
திருச்சி: திருச்சி விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல்களில் இருந்து 3 கிலோ தங்க கட்டிகள் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக உள்நாடு மற்றும் வெளிநாடு விமானங்கள் அதிகம் இயக்கப் படுவது திருச்சி விமான நிலையத்தில் தான். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அனைத்துப் பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ள கழிவறையில் சில மர்ம பார்சல்கள் கிடப்பதாக துப்புறவு ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அப்பார்சலில் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். மொத்தம் 3 பார்சல்களிலும் 3 கிலோ தங்கபிஸ்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கழிவறையில் வீசிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்











Click it and Unblock the Notifications