கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் – விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 3 பேர் கைது!
தருமபுரி: தருமபுரியில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்த கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அருகேயுள்ள லாலாகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர்.
அதே கிராமத்தில் உள்ள தனது பெரியம்மாவின் பராமரிப்பில் வசித்து வந்தார்.இந்த நிலையில் பெரியம்மா திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெள்ளிக்கிழமை வெளியேறிய அந்தப் பெண் தருமபுரி பேருந்து நிலையம் வந்தார்.
ஆத்திரத்தில், வீட்டைவிட்டு வெளியேறி, எங்கு செல்வது எனத் தெரியாமல் விழித்த அவருக்கு, அங்கு நின்றிருந்த வெண்ணாம்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த படையப்பா என்ற ரவி, அவரது மனைவி சாந்தி ஆறுதல் கூறியதுடன், வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற அந்தபெண்ணை, தங்களது வீட்டில் இருந்த தனியறையில் அடைத்து, விபசாரத்தில் ஈடுபடுமாறு அவர்கள் வற்புறுத்தினராம். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த அந்தப் பெண், இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து படையப்பா என்ற ரவி, அவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக நெசவாளர் காலனியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications