எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள்.. ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபர புகார்!
திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
சென்னை: சென்னையில் திமுக உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட சட்டசபை தலைவர்கள் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.

இதனைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாநிலையில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை வள்ளலார் நகரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்ததால் சிறைக்கு போனவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஈவிகேஎ. இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
அதிக குற்றம் செய்தவருக்கே அதிமுகவில் பதவி பெறுவதற்கு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவினரிடம் இருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications