மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி - விழுப்புரத்தில் பரிதாபம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் கணபதி, விவசாயி. இவரது மனைவி பூவாயி. நேற்று மாலை பூவாயி, அவரது மகள் இந்திராகாந்தி, பேரன் வெங்கடேசன் ஆகியோர் அவர்களுடைய நிலத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடி - மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
உடனே பூவாயி உள்பட 3 பேரும் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியது. இதில் பூவாயி, இந்திராகாந்தி, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இன்று காலையில்தான் இந்த துயர சம்பவம் அப்பகுதியினருக்கு தெரிய வந்தது. இறந்த 3 பேருடைய உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மின்னல் தாக்கி இறந்த 3 பேருடைய உடல்களையும் வரஞ்சரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications