நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியர் உள்ளிட்ட மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் முதல்நாளான திங்கட்கிழமைத்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.
இந்நிலையில் மனு கொடுப்பதற்காக நெல்லை சந்திப்பு சித்தரங்கன் தெருவை சேர்ந்த தொழிலாளி மாணிக்கம், அவரது மனைவி அனிதா ஆகியோர் வந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்த அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதனை கவனித்த போலீசார் விரைந்து சென்று 2பேரிடம் இருந்த தீப்பெட்டியை தட்டிவிட்டனர். மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், எங்களது சொத்தையும், வீட்டையும் சிலர் அபகரிக்க முயல்கின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் மேலப்பாளையம் பங்காளப்பா 3ஆம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரும் மண்ணெண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மூவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications