தனியாக செல்வோரிடம் வழிப்பறி... கோவையில் இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
கோவை: கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, புலியகுளம் அருகே உள்ள ஏரிமேடு அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜ் (30). இவர், மே 30-ம் தேதி இரவு வேலை முடிந்து மதுரை வீரன் கோயில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர், நாகராஜைத் தாக்கி அவரிடமிருந்த ரூ. 2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மே 31ம் தேதி இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீசார், கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திருந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப் பட்டவர்களில் இரண்டு பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகராஜிடம் பணம் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும், பள்ளிக்கு செல்லாமல் கோவை நகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனியாக நடந்து செல்வோரிடம், அம்மூவரும் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், இரண்டு சிறுவர்களையும் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் இருந்த பிரகாஷ் என்ற 23 வயது இளைஞரை கோவை நடுவன் சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications